×

தேர்தல் பணி, பிரசாரம் படப்பிடிப்புக்கு கமல் பிரேக்

சென்னை: தேர்தல் பிரசாரம் காரணமாக படப்பிடிப்புக்கு பிரேக் தந்துள்ளார் கமல்ஹாசன். கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தக்ஃலைப்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் தான் நடைபெறும் என்று தெரிகிறது. சென்னையில் மார்ச் மாதம் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெற இருந்தது. இந்த படப்பிடிப்பில் கமல்ஹாசன், ஜெயம் ரவி காட்சிகள் படமாக்கப்படும் என்று சொல்லப்பட்டது. இதனை அடுத்து படக்குழுவினர் அனைவரும் செர்பியா நாட்டிற்கு செல்ல இருப்பதாகவும் அங்கு தான் பிரமாண்டமாக கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள், பிரசாரம் உள்ளிட்டவை இருப்பதால் இப்போதைக்கு படப்பிடிப்புக்கு ஓய்வு தர கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். அதனால் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் இறுதியில் நடைபெறும் என கூறப்படுகிறது. இதேபோல், தான் நடித்து வரும் மற்ற படங்களான இந்தியன் 3, கல்கி படத்தின் படப்பிடிப்புகளிலும் தேர்தல் முடிந்துதான் கலந்துகொள்ள முடியும் என கமல்ஹாசன் திட்டவட்டமாக கூறிவிட்டாராம்.

The post தேர்தல் பணி, பிரசாரம் படப்பிடிப்புக்கு கமல் பிரேக் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Kamal ,Chennai ,Kamal Haasan ,Mani Ratnam ,Kollywood Images ,
× RELATED உத்தமவில்லன் பட விவகாரம் தொடர்பாக...